மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பு ஒரு நல்லெண்ண சமிக்ஞை -டக்ளஸ் தேவானந்தா


599111667douglus-Lஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தமக்கு அழைப்பு விடுத்தமை ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக கருதுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்கள் வழங்கப் போகும் ஆணையும் சேர்ந்து “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற அரசியல் இலக்கை வெற்றி பெறவைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் விசேட அழைப்பை ஏற்று இன்று (28) குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னரே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

நாம் எதிர்வரும் தேர்தலில் தனித்துவமாக எமது வீணைச் சின்னத்திலேயே போட்டியிடுகின்றோம்.

இந்த நிலையிலும் தமது நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தமையானது ´மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற எமது அரசியல் இலக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் புரிந்து கொண்டதன் வெளிப்பாடேயாகும்.

மத்தியில் யார்? ஆட்சியில் இருக்கின்றார்களோ அவர்களுடனேயே எமது பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும்.

தமிழ் மக்கள் தரப்பில் இருந்து யார் மக்களின் ஆணையைப் பெறுகின்றார்களோ அவர்களே எமது மக்களுக்காக ஆட்சியாளர்களை உரிய முறையில் கையாள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு