காலாவதியானது கூட்டு அரசு ஒப்பந்தம்! முடிவெடுக்காமல் தொடருகிறது ஆட்சி


ranil-wickramasinghe-and-maithripala-sirisena-640x400மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்பாடு கடந்த நள்ளிரவுடன் காலாவதியாகியுள்ளது.

2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், இரண்டு கட்சிகளும் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்கான, புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டிருந்தன.

இந்த புரிந்துணர்வு உடன்பாடு கடந்த செப்ரெம்பர் மாதத்துடன் காலாவதியாகியிருந்தது. இந்த நிலையில், இந்த உடன்பாட்டை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க முடிவுசெய்யப்பட்டிருந்தது.

நீடிப்புச் செய்யப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு கடந்த நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.

எனினும், இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டை நீடிப்பதா – இல்லையா என்று இரண்டு கட்சிகளும் இன்னமும் முடிவு செய்யவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுபற்றிக் கருத்து வெளியிட்ட ஐதேகவின் பிரதி பொதுச்செயலரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம், கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதா- நீடிப்பதா என்று கட்சிக்குள் இன்னமும் கலந்துரையாடப்படவில்லை.

உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னர் இரண்டு கட்சிகளின் தலைவர்களும் இதுபற்றி இறுதி முடிவை எடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு