யாழ் ஆயருடன் தமிழ் தேசியப் பேரவை சந்திப்பு


689707385jaffnaஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய பேரவையினர் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு, நேற்று (31.12.2017) ஞாயிற்றுக்கிழமை யாழ். மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பெர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் ஆடிகளால் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.

இன்று காலை 10.30 அளவில் யாழ் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழ் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன், துணை முதல்வர் வேட்பாளர் ஆ.தீபன்திலீசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு