பொலித்தீன் தடை கட்டாய அமுலுக்கு வந்தது


image_1503371623-d231d5ecf1பொலித்தீன் தாள் மற்றும் பெட்டி உள்ளிட்ட பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கான தடை நேற்று முதல் கட்டாய அமுலுக்கு வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

லன்ச்சீட், பொலித்தீன் மீது கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் குறித்த பொருட்களின் பாவனையை தவிர்த்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதற்கமைய தேசிய, சமய மற்றும் அரசியல் உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் இவ்வகையான பொலித்தீன் பொருட்களை பயன்படுத்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று முதல் லன்ச்சீட், பொலித்தீன் விற்பனை தொடர்பில் விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் மர்வின் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு