அரசாங்கம் கலைக்கப்படுவதை இரண்டு பிரதான கட்சிகளும் விரும்பவில்லை என்கிறது ஜே.வி.பி


959112727Anura-Kumara-Lதேசிய அரசாங்கம் கலைக்கப்படுவதை பிரதான இரண்டு கட்சிகளும் விரும்பவில்லை. இரு தரப்பினரும் அமைச்சுப்பதவிகளை துறக்கவும் விரும்பப்போவதில்லை. ஆகவே 2020 ஆம் ஆண்டு வரையில் இவர்கள் பொய்யான காரணிகளை கூறிக்கொண்டு ஆட்சியை தொடர்வார்கள் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வெற்றி மூலம் அரசாங்கத்தை ஆட்டம் காணவைக்கும் எமது போராட்டம் தொடரும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் தேசிய அரசாங்கம் தனது உடன்படிக்கை காலத்தை கடந்து செயற்பட்டுவருகின்றமை குறித்து வினவிய போதே கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மத்தியவங்கி பிணைமுறி ஊழலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்புபட்டுள்ளதற்கான காரணங்களும், ஆதாரங்களும் அதிகமாகவே உள்ளன.
குற்றவாளிகளை காப்பாற்றவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார் என சந்தேகம் கொள்வதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக மக்களுக்கு அறிக்கை தொடர்பில் அறிந்துகொள்ள தாம் ஜனாதிபதி செயலாளரை நாளை சந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு