ஐந்து வருட ஆட்சியில் 99 வருடங்களுக்கு சொத்துகளை விற்பனை செய்யும் முட்டாள் தனம் – கஸ்ஸப்ப தேரர் குற்றச்சாட்டு


omaareஐந்து வருடத்திற்கு ஆட்சிக்கு வந்துவிட்டு 99 வருடங்களுக்கு நாட்டு சொத்துக்களை வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு விற்பனை செய்யும் ஆட்சியாளர்கள் ஆட்சிபீடத்தில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள் என்று ஸ்ரீரோஹண சங்க சபையின் செயலாளர் ஒமாரே கஸ்ஸப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

“5 வருடங்களுக்கு ஆட்சியை ஏற்றுக்கொண்ட நபர் அந்த வருடங்களிற்குள் எப்படி நாட்டை ஆட்சிசெய்வது பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். 5 வருடங்களுக்கு ஆட்சிக்குவந்துவிட்டு எவ்வாறு அவர்கள் 99 வருட குத்தகைக்கு நிலங்களை விற்பனை செய்வது? இந்த நாட்டின் தேசிய ஐக்கியத்திற்கு பங்கம் ஏற்படுகின்ற தீர்மானங்களை எடுப்பது முட்டாள்தனமாகும். இந்த நாட்டை வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு வழங்கமுடியாது.

எனவே அப்படிப்பட்டவர்கள் ஆட்சியிலிருக்கக்கூடாது. எனவே மக்கள் சிந்தித்து நாட்டு சொத்துக்களைப் பாதுகாப்பதாக உறுதியளிக்கும் பிரிவினருக்கு ஆதரவளிப்பது குறித்து பொறுமையான தீர்மானம் எடுக்க வேண்டும். புத்த சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும், மதமற்ற நாட்டில் மக்கள் வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியாது. பௌத்த மதத்திற்கான இடத்தை அரசியலமைப்பிலிருந்து இல்லாதொழிப்பதற்கு எவராகிலும் முயற்சி செய்தால் அதற்கெதிராக மக்கள் கிளர்ந்தெழும்பவும் வேண்டும். இவற்றை அவதானித்து ஆராய்ந்தே மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு