அரச உத்தியோகத்தர்களுக்கும் வீட்டுத்திட்டம்


ranjithஅரச சேவைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான சொந்த வீடுகள் முறை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

புதிய வருடத்திற்கான அரச சேவைகளை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“நில செவன ” ​வேலைத்திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ கடந்த 3 வருடமாக 14 இலட்சம் அரச பணியாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களுக்கான கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க இந்த அரசாங்கத்தால் முடிந்தது.

அதேபோல் இந்த வருடத்தில் ஊழல், மோசடியற்ற அரச பணியாளர்களை உருவாக்குவதையே எதிர்பார்க்கின்றோம்” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு