வடக்கு முதல்வரை பழிவாங்குகிறாரா டெனீஸ்வரன்? – வவுனியா பேருந்துநிலைய விவகாரத்தில் நடப்பது என்ன


Denisvaran-Challenged-Prime-Minister-Viginesvaranவட இலங்கை அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பின் பின்னணியில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் இருப்பதாக தெரியவந்திருக்கிறது. புதியதாக பல இலட்சம் ரூபாய்கள் நிதி செலவில் கட்டப்பட்ட வவுனியா புதிய பேருந்து நிலையத்தினை செயற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுவந்த முயற்சிகள் தொடர்ந்தும் தடுக்கப்பட்டுவந்திருந்தன.

இந்த நிலையில் வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மூடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்கவேண்டும் என வடமாகாண முதலமைச்சரும், மாகாண போக்குவரத்து அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரன் உத்தரவிட்டதை தொடர்ந்து இ.போ.ச ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளார்கள்.

இதன் பின்னணியில் முதலமைச்சருக்கு எதிரான தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் இருப்பதாக கூறப்படுவது தொடர்பாக புறக்கணிப்பை நடாத்திவரும் குறித்து வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கிருஸ்ணன் புவி கூறுகையில்,

இ.போ.ச உழியர்களின் பணிப்புறக்கணிப்பின் பின்னணியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரனுக்கு எதிரான தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருப்பது உண்மையே.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு ஆதரவு அதிகரித்துவரும் நிலையில் அவரை வீழ்த்தவேண்டும் என்பதற்காக, தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் இந்த பணி பகிஷ்கரிப்புக்கு பின்னால் இருந்து நடத்துவதாக மக்கள் மத்தியில் கருத்து உள்ளது.

அதற்கு இயைந்தால்போல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த பணி பகிஷ்கரிப்பின் பின்னால் இருப்பது உண்மையே என அவர் கூறினார்.

இதனிடையே முன்னாள் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் இந்தச் சம்பவத்தின் பின்னால் இருப்பதாக பெயர் குறிப்பிடவிரும்பாத இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதல்வரால் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவரைப் பழிவாங்குவதற்காகவே டெனீஸ்வரன் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு