கருணாநிதி ரஜினி இன்று மாலை சந்திப்பு


Rajini-invites-Karunanidhi-to-watch-Kochadaiiyaanஇன்று(03) மாலை ரஜினிகாந்த் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் தனிக்கட்சி தொடங்கி வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக கூறியுள்ளார்.

தான் செய்யப் போவது ஆன்மீக அரசியல் என்றும் அதில் உண்மை, நேர்மையை கடைபிடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ரஜினி மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றார். அங்கு சுவாமி கவுதமானந்தாவை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிகிறது.

புதுக்கட்சி தொடங்கும் நிலையில் ரஜினி, கருணாநிதியை சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு