ஆசிரியர்களுக்கு இலவச புடவை வழங்க திட்டம் – கல்வி அமைச்சு

வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு சாரிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் புடவைகளின் விலையும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆசிரியர் சங்கம் புடவைகளை கட்டாயமாக அணிந்து செல்வது என்ற முறையை மாற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திவருகின்ற நிலையில் கல்வி அமைச்சர் மேற்குறிப்பிட்ட வகையில் தெரிவித்துள்ளார்.

புடவை அணிந்து பாடசாலைக்கு கடமைக்குச் செல்ல முடியாது ஆசிரியைகள் தொடர்பில் ஆய்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, புடவை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் வேறும் ஆடைகளை அணிந்து பாடசாலை செல்ல நேரிட்டுள்ளதாக ஆசிரியைகள் விசனம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இவ்வாறான வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு இலவசமாக புடவைகளை வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்படும்.

நாள்தோறும் புடவை அணிந்து செல்வதனால் ஏற்படக் கூடிய செலவினை தவிர்க்கவே சில ஆசிரியைகள் வேறு ஆடைகளை விரும்புகின்றார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *