நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 13 கடற்படையினரால் கைது


5a22268f6dd06-IBCTAMILநெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் எனத் தெரிவித்து இந்திய மீனவர்கள் 13 பேரை கைதுசெய்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களது 2 மீன்பிடி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு யாழ்-மீன்பிடி பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 71 பேர் புதுவருடத்தை முன்னிட்டு இரண்டு கட்டங்களாக விடுவிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மீனவர் தொழிற்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு