தமிழரசு கட்சியின் தன்னிச்சையான தீர்மானங்களே உட்பூசல்களுக்கு காரணம் – சித்தார்த்தன் எம்.பி


Tharmalingam-Sitharthan-yaalaruviஇலங்கை தமிழரசு கட்சியின் தன்னிச்சையான தீர்மானங்களே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்களுக்கு ஏதுவாக அமைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான தீர்மானங்களை இலங்கை தமிழரசு கட்சி தனித்தே மேற்கொள்கிறது.

பங்காளிக் கட்சிகளுடன் எந்த கலந்துரையாடலையும் நடத்துவதில்லை.

இதன்விளைவாகவே ஏனைய கட்சிகள் முரண்பட நேரிட்டது.

ஆனால் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, எதற்காக ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்துக் கொண்டது என்பது புரியவில்லை.

இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்றும் தெரியவில்லை.

தற்போது அரசியல் யாப்பு தயாரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தநிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்று, அதனை பலவீனப்படுத்துவது, தேசியப்பிரச்சினைக்கான தீர்வை மேலும் தாமதப்படுத்தும்.

எனவே தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனேயே இணைந்து பயணிக்கும் என்று சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு