மைத்திரியின் அரசியல் வாழ்க்கைக்கு ஆபத்து -வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே


_91199397_3a5a7016சுதந்திரத்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட இந்த நல்லாட்சி அரசாங்கத்தால் பல விசாரணைப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த மற்றும் நிகழ்காலங்களில் நடைபெற்ற ஊழல்களை ஆராய்ந்து அவை தொடர்பில் அறிக்கை பெறப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,இந்த அறிக்கை கையில் கிடைத்ததும் ஜனாதிபதி ஒன்றை தெளிவாக குறிப்பிட்டார். கட்சி, பதவி பாராது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து பிரதான இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.இந்த விசாரணைகள், இது குறித்து ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கே ஆபத்தாக மாறி விடும்.தமது கட்சியின் குற்றவாளிகளை காப்பாற்றி விட்டு ஏனைய கட்சி உறுப்பினர்களை ஜனாதிபதி தண்டிப்பதாக சில பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.ஆனால் ஜனாதிபதி அவ்வாறு செய்யவில்லை. அனைத்து கட்சிகளையும் சமமாகவே பார்க்கின்றார். இந்த நேரத்தில் ஊடகங்கள் ஜனாதிபதிக்கு சாதகமாக செயற்பட வேண்டும், உண்மைகளை வெளிப்படுத்தும் உரிமை ஊடகங்களுக்கு இருக்கின்றது.ஆகவே தனது கடமைகளை ஊடகங்கள் சரியாக செய்ய வேண்டும் எனவும் எனவும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு