பிணைமுறி விவகாரம் ; பாராளுமன்றத்தைக் கூட்ட ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டு


dinesh_gunawardena_860_05மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தைக் கூட்டி நடவக்கை எடுக்க ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டு என கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

கூட்டு எதிரணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு பொரளையில் அமைந்துள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

ஆனாலும் பாராளுமன்றம் தற்போதைய நிலையில் கூட்டப்படும் சாத்தியம் இல்லையென்றே கருதவேண்டியுள்ளது.

ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தை கூட்டுவதற்குரிய அதிகாரம் ஜனாதிபதிக்குண்டு.

எனவே ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கூட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு