தமிழரசுக்கட்சியின் சவப்பெட்டிக்கு மாவை ஆணிஅடிக்கிறார் – சிவகரன் குற்றச்சாட்டு


V-S-Sivakaranதமி­ழ­ர­சுக் கட்­சி­யின் சவப்­பெட்­டி­யின் கடைசி ஆணியை மாவை. சேனா­தி­ரா­சா­தான் அடிப்­பார் என்று ஆரம்­பத்­தில் மங்­கை­யர்­க­ர­சி­ கூறிய கூற்­றுக்கு ஏற்­றாற்போல் தற்­போது அவர் செயற்­ப­டு­கின்­றார். தமி­ழ­ர­சின் அழிவு ஆரம்­ப­மா­கி­விட்­டது. இவ்­வாறு ஜன­நா­ய­கத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வர் சிவ­க­ரன் குற்­றஞ்­சாட்­டி­னார். தமிழ்த் தேசிய விடு­த­லைக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் அறிக்­கை வெளி­யீடு நல்­லூர் இளங்க­லை­ஞர் மண்­ட­பத்­தில்  நடை­பெற்­றது.

அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்த­தா­வது-:

போருக்­குப் பின்­னர் இலங்­கைத் தமிழ் மக்­களை நடுத் தெரு­வுக்கு கொண்டு வர வேண்­டும், எம்­மைச் சந்தி சிரிக்க வைக்க வேண்­டும் என்ற நோக்­கில் தமிழ்த்தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு வந்­த­வர் எம்.ஏ.சுமந்­தி­ரன்.

மாவை.சேனா­தி­ராசா பரி­தா­பத்­துக்­கு­ரிய மனி­த­னாக இருக்­கின்­றார். அவ­ருக்கு எது­வும் விளங்­காது. அவ­ரைத் தலை­வ­ராக்கி விட்­டால் போதும் அல்­லது நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க்கி­விட்­டால் போம் அல்­லது ஐயா என்று அழைத்­தால் போதும். அவ­ருக்கு முது­கெ­லும்பு என்­றதே இல்லை.

அவ­ரி­டம் ஐந்து தம்­பி­கள் உள்­ளன. ஓம் தம்பி, பார்ப்­பம் தம்பி, பேசு­வம்தம்பி, சந்­திப்­பம் தம்பி, பார்க்­க­லாம் தம்பி என்று அவற்றை வைத்தே ஐம்­பது ஆண்­டு­க­ளைக் கடந்து விட்­டார். 2011ஆம் ஆண்டு கூட்­ட­மைப்­புக்­குள் சுமந்­தி­ரன் வந்­த­போது அது மிக­வும் மோச­மா­னது என்று கூறி­யி­ருந்­தேன்.

இந்த ஏமாற்று அர­சி­ய­லுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க 2013 ஆம் ஆண்­டி­லி­ருந்தே நாம் முயற்­சித்­தோம். அந்­தப் பேச்­சுக்­க­ளில் தீர்க்­க­மான முடி­வு­கள் எட்­டப்­ப­ட­வில்லை.

அனை­வரை­யும் இணைக்­கும் முயற்­சி­க­ளில் சில விட்­டுக்கொடுப்­பு­க­ளைச் செய்ய கஜேந்­தி­ர­கு­மார் தவ­றி­விட்­டார். பல முயற்­சி­களை அவர் எடுத்­தி­ருந்­த­போ­தும் சில தவ­று­க­ளை­யும் அவர் செய்­து­விட்­டார். இந்­தச்சம­யத்­தில் அது தொடர்­பில் விமர்­சிக்க விரும்­ப­வில்லை – என்­றார்.

உங்கள் கருத்து
  1. BC on January 6, 2018 2:41 pm

    //தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் சவப்­பெட்­டி­யின் கடைசி ஆணியை மாவை. சேனா­தி­ரா­சா­தான் அடிப்­பார் என்று ஆரம்­பத்­தில் மங்­கை­யர்­க­ர­சி­ கூறிய கூற்­றுக்கு ஏற்­றாற்போல் தற்­போது அவர் செயற்­ப­டு­கின்­றார்.//
    மாவை அண்ணை புலிகளின் கொலை வெறி ஏற்படுத்திய பயம் காரணமாக தான் கட்­சி­யிக்கு சவப்­பெட்­டி செய்யும் நிலையில் இருந்தார். அது சரியான பிழை தான்.
    மகிந்தர் புலிகளை ஒழித்த பின் அவர் மறுபடியும் தளபதி ஆகி விட்டார் சம்பந்தர் அய்யா போல சுதந்திரமாக செயல்படுகிறார்.
    //போருக்­குப் பின்­னர் இலங்­கைத் தமிழ் மக்­களை நடுத் தெரு­வுக்கு கொண்டு வர வேண்­டும், எம்­மைச் சந்தி சிரிக்க வைக்க வேண்­டும் என்ற நோக்­கில் தமிழ்த்தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு வந்­த­வர் எம்.ஏ.சுமந்­தி­ரன்.//
    தமிழீழ போரை ஆரம்பித்ததே தங்களது சுய நலன்களுக்காக அதை ஆரம்பித்து நடத்தி நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் மக்களை எல்லாம் வரலாறு பேச போகும் தமிழீழ போர் இடபெயர்வு என்று ஒரு வழியாக நடுத் தெரு­வுக்கு கொண்டு வந்து ஒரு வழி பண்ணிவிட்டாச்சு.அவர்களை மேலும் இந்த நிலையில் வைத்திருந்து எப்படி அரசியல் இலாபம் பெறலாம் என்பதே உங்கள் திட்டம்.


  2. BC on January 8, 2018 3:39 pm

    இன்னென்றையும் தமிழ்தேசியவாதிகள் தந்திரமாக சொல்லி ஊசுப்பு ஏற்றுகிறார்கள் புலி இயக்கத்து பிராபகரனும் அந்த ஆசாமியின் புலி இயக்கமும் தோல்வி அடைந்ததை இலங்கை தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து அழுது இலங்கை தமிழர்கள் எல்லாரும் தோற்று போனவர்கள் என்று ஒப்பாரி வைக்க வேண்டுமாம்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு