நான்கு வயதில் நூல் எழுதி கின்னஸ் சாதனை


kinnas (1)நான்கு வயதில் நூலொன்றை எழுதி உலகில் இளம் எழுத்தாளராக கின்னஸ் சாதனை படைத்துள்ள சிறுவனான தனுவக்க சேரசிங்க நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தார்.

தனது பெற்றோருடன் சீஷெல்ஸில் வசித்துவரும் இந்த சிறுவன் ” Junk Food” என்ற ஆங்கில நுலை எழுதும் போது அவருக்கு வயது நான்கு வருடங்களும் 356 நாட்களும் ஆகும். இந்நூலை அவர் 3 நாள் காலப்பகுதியில் எழுதியிருந்தார்.

சிறுவனின் திறமையை பாராட்டிய ஜனாதிபதி பரிசில் வழங்கியதுடன் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக தனது ஆசீர்வாதங்களையும் வழங்கினார்.

சீஷெல்ஸிலுள்ள இலங்கைத் தூதுவர் டிக்கிரி ஹேரத்குணதிலக மற்றும் சிறுவனின் பெற்றோர்களான துஷித்த சேரசிங்க மற்றும் அப்சரா சேரசிங்க ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு