சீனாவுடனான இலங்கையின் நெருக்கம்; மைத்திரியிடம் நேரில் அதிர்ப்தி வெளியிட்ட ஜப்பான்


japan-1இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் பிரசன்னம் தொடர்பில் கடும் அதிருப்தியை ஜப்பான் நேரடியாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தெரியப்படுத்தியிருக்கின்றது.

கொழும்புக்கு சென்றுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ ஜப்பானிய அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தியிருக்கின்றார்.

அரசுமுறைப் பயணமொன்றை மேற்கொண்டு கொழும்புக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ தனது விஜயத்தின் முதலாவது பணியாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இலங்கைக்கு ஜப்பானுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் மிக நெருக்கமான இராஜதந்திர உறவுகளை நினைவு கூர்ந்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், தொடர்ந்தும் அந்த உறவு நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய மைத்ரி ரணில் தலைமையிலான இலங்கையின் தேசிய அரசாங்கம் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஜப்பானிய அரசு முழுமையான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கும் என்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ உறுதியளித்துள்ளார்.

அடுத்த மாதம் ஜப்பானின் முக்கிய முதலீட்டாளர்கள் குழுவொன்று கொழும்புக்கு விஜயம்செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஜப்பானிய அமைச்சர் அதன்போது அவர்கள் முதலீடுகளுக்கும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் இருக்கும் வாய்ப்புக்கள் தொடர்பில் ஆழமாக ஆராய்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் பிரசன்னம் தொடர்பிலான தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ சீனாவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நீண்டகால குத்தகைக்கு வழங்குவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அது மாத்திரமன்றி ஜப்பான் இந்தியாவுடன் இணைந்து இலங்கையின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அதற்கானத்திட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஜப்பான் வழங்கிவரும் உதவிகளுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சீனாவிற்கு மாத்திரம் தமது அரசு முன்னுரிமை கொடுக்கவில்லை என்று கூறியதுடன் ஏனைய அனைத்து நாடுகளையும் ஸ்ரீலங்காவில் முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு