கூட்டமைப்பு வேட்பாளர் மீது சாவகச்சேரியில் தாக்குதல்


tna-300x199 (1)சாவகச்சேரிப் பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சரமாரியான தாக்குதலுக்கு உள்ளான அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் இன்று (06) உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தினை வீடு வீடாகச் சென்று மேற்கொண்டிருந்தார். அவர் ஒரு வீட்டினுள் பிரச்சாரத்துக்கு சென்றபோது உங்களுக்கு வாக்களிக்கப்போவதில்லை வெளியில் செல்லுங்கள் எனக் கூறிய வாக்காளர் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்தே குறித்த வேட்பாளர் தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு