இலங்கை தொடர்பில் கனடா தொடர்ந்தும் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் – ஹரி ஆனந்தசங்கரி


IMG_5819காணாமல் ஆக்கப்பட்டவரிகளின் உறவினர்களை சந்திப்பதற்காக வருகை  தந்து அவர்களுடன் உரையாடிய போது அவர்கள் இலங்கை அரசாங்கத்திலும், சர்வதேசத்திலும் நம்பிகையிழந்தே காணப்படுகின்றனர்   எனவே கனடா இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும்  என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கனேடிய கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் இன்று(06) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 321 ஆவது நாளாக  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற் இடத்திற்குச் சென்ற அவர்  காணாமல் ஆக்கப்பட்டவரிகளின் உறவினர்களுடன் கலந்துரையாடிய பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த ஹரி ஆனந்தசங்கரி,
காணாமல் ஆக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக தான் இன்று இங்கு வந்ததாகவும், கடந்த தடவை வந்த போது இருந்த   அதேநிலைமை இன்றும் தொடர்கிறத., எவ்வித முன்னேற்றமும் இல்லை,ஜநா மனித உரிமைகள் பேரவையிலும் தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகின்றேன்.மேலும் இலங்கை பிர்ச்சினை தொடர்பில் கனடா இறுக்கமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைபிடிக்கும் எனவும் தெரிவித்தார்

 

உங்கள் கருத்து
  1. BC on January 6, 2018 2:49 pm

    இலங்கை பிர்ச்சினை தொடர்பில் கனடா இறுக்கமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைபிடிக்கும் எனவும் தெரிவித்தார்
    உங்களது வாக்குகள் நலன் கருதி இப்படிதானே சொல்வீர்கள்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு