முல்லைத்தீவில் கடற்படை முகாமுக்காக 671 ஏக்கர் காணி அபகரிப்பு; அரசாங்கம் ஒப்புதல்


vadduvagalமுல்லைத்தீவில் கடற்படைத் தளத்தை அமைப்பதற்கு 671 ஏக்கர் நிலத்தை கைய கப்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்று அரசு ஒப்புக் கொண்டுள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், எழுப்பப் பட்டிருந்த வினாவுக்கு காணிகள் மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலர் தயாரத்ன வழங்கிய பதிலில் இந்தக் காணி சுவீகரிப்புத் திட்டம் அம்பலமாகியுள்ளது.

கடற்படையின் முல்லைத்தீவு பிரதான தளத்தை உருவாக்குவதற்காக என்று இந்தக் காணி சுவீகரிப்புக்கான உத்தரவு, பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்தப் பதிலில் கூறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில், வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்கு ஆகிய பகுதிகளில் உள்ள 671 ஏக்கர் காணிகள் பொதுத் தேவைக்காக சுவீகரிக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், அமைச்சர் கயந்த கருணாதிலக அறிவித்திருந்தார்.

அதேவேளை, இந்தக் காணியை ஒரு மாத காலத்தில் விடுவிப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அவர்களின் கொடும்பாவி எரிக்கப்படும் என்று காணிக்குரிய மக்கள் அறிவித்துள்ளனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு