தேசியப்பட்டியல் உறுப்புரிமையை காட்டி அருந்தவபாலனை உள்ளீர்க்க முயற்சி செய்கிறதாம் தமிழரசுக்கட்சி


Arunthavapalanதேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தர்ப்பம் பெற்றுத்தருவதாக தெரிவித்து தமிழரசுகட்சி தென்மராட்சி அமைப்பாளர் அருந்தவபாலனை மீண்டும் தமிழரசுக்கட்சி ஆதரவாளராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வேட்பாளர் நியமனம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கும் அருந்தவபாலனுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கினை அடுத்து அருந்தவபாலன் தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறியிருந்தார்.

இதனை அடுத்து சாவகச்சேரி நகரசபை தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தனது ஆதரவாளர்கள் மூலம் பிரச்சாரங்களை அவர் முன்னெடுத்துவருகின்றார்.

இந்நிலையில் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பு சந்தேகத்திற்குள்ளாகிய உள்ளுராட்சி மன்றங்களுள் ஒன்றாக சாவகச்சேரி நகரசபையுமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவமோகன், சாந்தி சிறிஸ்காந்தராசா ஆகிய இருவருக்குமிடையிலான மோதலையடுத்து தேசியப்பட்டியல் சாந்தியை தூக்கிவிட்டு அருந்தவபாலனிற்கு சந்தர்ப்பம் வழங்கவும் அதன் மூலம் அவரை மௌனிக்கவைக்கவும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உள்ளூராட்சிமன்ற தேர்தலிற்காக வேட்பாளர்களை தேர்வுசெய்தபோது, ஒருவரின் தெரிவை மற்றவர் நீக்குவதாக முல்லைதீவிலும் இருவரும் ஏட்டிக்குப்போட்டியாக நடந்து கொண்டனர்.

கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் வற்றாப்பளை வட்டாரத்தில் வேட்பாளர் தெரிவை சாந்தி சிறிஸ்கந்தராசா முடித்திருந்த நிலையில், இறுதிநேரத்தில் அதில் சிவமோகன் மாற்றம் செய்திருந்தார்.இந்த குழப்பங்கள் தற்போது வரை நீடிக்கின்றது.

இந்நிலையிலேயே தமிழரசுக்கட்சியின் அதிருப்தி உறுப்பினர் அருந்தவபாலனை தொடர்பு கொண்டு சிவமோகன் பேசி வருகிறார் என்றும் அருந்தவபாலன் கட்சியை விட்டு விலககூடாது, கட்சிக்குள் போராடி தேசியப்பட்டியல் நியமனத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வருகிறார் என்றும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு