ஐக்கிய தேசியக் கட்சிக்கு மனோ எச்சரிக்கை


Mano-Ganesan-640x400கூட்­டணி தர்­மத்­து­டன் நடந்­து­கொள்ள ஐக்­கிய தேசி­யக் கட்­சியே முயற்­சிக்க வேண்­டும். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் உப­த­லை­வர் ஒரு­வரே எங்­க­ளுக்­கெ­தி­ராக கருத்­துக்­களை வெளி­யிட்­டால் நாங்­கள் காக்­கும் கூட்­டணி தர்­மத்தை மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டி­வ­ரும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பொதுச் செய­ல­ரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசி­மி­டம் காட்­ட­மா­கத் தெரி­வித்­தி­ருக்­கி­றார் தமிழ் முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் தலை­வ­ரும் அமைச்­ச­ரு­மான மனோ கணே­சன்.

தேர்­தல் மற்­றும் தற்­போ­தைய அர­சி­யல் நில­மை­கள் குறித்து அமைச்­சர் மனோ கணே­சனை அமைச்­சர் கபீர் ஹாசிம் தொலைபேசி ஊடாகத் தொடர்­பு­கொண்டு பேசி­னார். அப்­போதே மனோ இந்தக் கருத்­துக்­களை அவ­ரி­டம் தெரி­வித்­துள்­ளார்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் சில இடங்­க­ளில் இணைந்து தேர்­த­லில் போட்­டி­யிட்­டா­லும் தனது கட்­சிக்குத் தனித்­து­வம் உண்­டென்­பதை விளங்­கா­மல் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் முக்­கிய தலை­வர்­கள் பொறுப்­பற்ற முறை­யில் கருத்­துக் கூறு­வது சிறு­பிள்­ளைத்­த­ன­மா­ன­தென்­ப­தால் கூட்­டணி தர்­மத்­து­டன் செயற்­பட அந்­தக் கட்­சி­யின் உப­த­லை­வ­ருக்கு அறி­வு­ரை­களைச் சொல்ல வேண்­டு­மென இதன்­போது குறிப்­பிட்­டுள்ள அமைச்­சர் மனோ, இன்­ன­மும் நாக­ரி­க­மாக அர­சி­யல் நடத்­து­வ­தால் கூட்­டணி தர்­மத்தை தமது கட்சி கடைப்­பி­டித்­து­வ­ரு­வ­தாகச் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு