ஜனாதிபதி 6 வருடங்கள் பதவி வகிக்கலாம் – சட்டமா அதிபர்


jayantha-415x260ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 வருடங்கள் பதவி வகிக்கலாம் என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உயர் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றபோது குறித்த சட்டம் அமுலுக்கு வராத​தையடுத்து 6 வருடங்கள் தான் பதவி வகிக்க முடியுமா? என உயர்நீதிமன்றத்திடம் ஆலோசனை கோரியிருந்தார்.

இதற்கமைய விடயம் தொடர்பில் ஆராந்த சட்டமா அதிபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 வருடங்கள் பதவி வகிப்பதில் எந்தவித தடையும் இல்லை என உயர்நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.

அத்துடன் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் இதற்கு தடையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு