நாடாளுமன்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை


parliament-1நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நாடா­ளு­மன்­றத்­தி­னுள் மோத­லில் ஈடு­பட்­டது தொடர்­பில் விசா­ரணை நடத்­தப்­ப­டும் என்று பிரதி சபா­நா­ய­கர் திலங்க சும­தி­பால தெரிவித்துள்ளார்.

இந்த மோதல் சம்­ப­வம் தொடர்­பில் சபா­நா­ய­கர் அலு­வ­ல­கம் சார்பில் பிரதி சபாநாயகல் வெளியிட்டுள்ள செய்­திக்குறிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்­சித் தலை­வர் கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட முடி­வின் பிர­கா­ரமே தலைமை அமைச்­ச­ருக்கு நாடா­ளு­மன்­றத்­தில் சிறப்பு அறி­விப்­பொன்றை வெளி­யிட சந்­தர்ப்­பம் வழங்­கப்­பட்­டது.

ஆனால் எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இதற்கு இடை­யூறு செய்­தார்­கள்.

ஏற்­க­னவே திட்­ட­மிட்டே பதா­கை­கள் எடுத்து வந்து கூட்டு எதி­ரணி சபை நடு­வில் கோஷம் எழுப்­பி­ய­தாக ஆளும் தரப்பு குற்­றஞ் சாட்­டி­யுள்­ளது. இரு தரப்­பும் ச​பை நடு­வில் பதி­லடி வழங் கிக் கொண்­டன.

நாடா­ளு­மன்­றத்­தி­னுள் மோத­லில் ஈடு­பட்­டது தொடர்­பில் விசா­ரணை நடத்­தப்­ப­டும். என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு