“போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு பள்ளிக்குள் அனுமதியில்லை, ஜனாசா அனுமதியில்லை.”- காத்தான்குடி பள்ளிவாசல் நிர்வாகம் எச்சரிக்கை !

காத்தான்குடியில் போதை பொருள் வியாபரிகள் மற்றும் பாவனையாளர்கள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் நிறுத்த வேண்டும். இல்லாத விடத்தில் அவர்களுக்கும் பள்ளிவாசலுக்கும் உள்ள தொடர்புகள் உட்பட்ட பல தொடர்புகள் நிறுத்தப்படுவதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்தால் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய பிரத்தியோக இடம் ஓதுக்கபடும் போன்ற தீர்மானங்களை எடுத்துள்ளதாக இன்று (12) புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் தலைவரும் வர்த்தக சங்க தவைலருமான கலந்தர்லெப்பை முகமட் பரீட் தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் மாதாந்த கூட்டம் இடம்பெற்றபோது அதில் போதை பொருக்கு அடிமைப்பட்ட மக்களை மீட்டெடுக்க சில தீர்மானங்களை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்யும் இல்லங்களில் நடைபெறும் திருமணத்திற்கு எமது பள்ளிவாசலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படமாட்டாது. அதேபோல இல்லங்களில் நடைபெறும் ஜனாஸாக் கடமைகளுக்கு எமது பள்ளிவாசலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படமாட்டாது என்பதுடன் அவர்களின் ஜனாஸாக்கள் எமது மையவாடியில் அவர்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்யப்படும்

அதேவேளை போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் பெயர் விபரங்கள் விளம்பரப் பலகை மூலம் காட்சிப்படுத்தப்படுவதுடன் போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் விபரங்களை உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் மஹல்லா உரிமம் இரத்துச் செய்யப்படும் போன்ற புதிய தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *