வைரமுத்து மீது, நாடு முழுவதும் வழக்கு தொடர திட்டம் – ராம்லால்


vairamuthu-to-erect-a-statue-for-kb-feature-image-4B35yQ6NfOicq0uKK64G4ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய, கவிஞர் வைரமுத்து மீது, நாடு முழுவதும் வழக்கு தொடர, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

அதுபற்றி, அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலர், ராம்லால் தலைமையில், சென்னையில் இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது.

ஜன., 7ல், ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆண்டாள் நாச்சியார் குறித்து, சர்ச்சைக்குரிய விதத்தில், வைரமுத்து பேசியது, இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதற்கு, வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். ‘அவர், ஸ்ரீவில்லிபுத்துார், ஆண்டாள் கோவில் சன்னதிக்கு வந்து, மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, பல்வேறு இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தி வருகின்றன.

பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர், ராம்லால், நேற்று முன்தினம் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்க, மதுரை வந்துள்ளார். அவரை, ஸ்ரீவில்லிபுத்துார், ஆண்டாள் கோவில் பாதுகாப்பு பேரவை தலைவர், ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமையில், இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்து, வைரமுத்து விவகாரம் குறித்து பேசினர்.

‘வைரமுத்து மீது, நாடு முழுவதும் வழக்கு தொடுக்க வேண்டும். கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதத்தை இழிவாக பேசியதற்காக, அவர் மீது உச்ச நீதிமன்றத்தில், பா.ஜ., வழக்கு தொடுக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, ராம்லாலிடம் வலியுறுத்தி உள்ளனர்.

அவர்களிடம், ராம்லால், ‘சென்னை, கமலாலயத்தில், இன்று நடக்கவுள்ள, பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில், இதுபற்றி கலந்தாலோசித்து, உறுதியான முடிவுகள் எடுக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.

உங்கள் கருத்து
  1. BC on January 23, 2018 3:46 pm

    இலங்கை தமிழர்களால் பொப்பிசை சக்கரவர்த்தி என்று அழைக்கபட்ட மனோகரன் காலமாகிவிட்டார் அவரை பற்றி ஒரு செய்தி தேசம்நெற்றில் இல்லை
    எனது மன வருத்தத்தை ஜெயபாலனுக்கு பதிவு செய்கிறேன்
    இந்த வைரமுத்து புலிகளை கண்களை மூடிக்கொண்டு போற்றி புகழ் பாடிய கவிஞர்
    புலம் பெயர் புலி ஆதரவாளர்களே வைரமுத்துக்கு ஆதரவு இப்போது கொடுக்கவில்லை இலங்கையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கஜேந்திரகுமார் போன்றவர்களே இப்போது வைரமுத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு