யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆறுபேர் இடைநிறுத்தம்


imagesயாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக மாண­வர்­க­ளி­டையே  கடந்­த ­வா­ரம் ஏற்­பட்ட கைகலப்­புத் தொடர்­பில் கலைப் பீடத்­தைச் சேர்ந்த 6 மாண­வர்­கள் விசா­ர­ணைக்­காக இடை­நி­றுத்­தப்­பட்­ட­னர். அதே­வேளை நேற்­று­முன்­தி­னம் இரவு கைக­லப்­பில் ஈடு­பட்­ட­வர்­கள் கலைப்­பீட மாண­வர்­கள் அல்ல என்று கலைப்­பீட மாணவ ஒன்­றி­யம் தெரி­வித்­துள்ளது.

கடந்த வாரம் மாண­வர்­க­ளி­டையே நடந்த கைக­லப்­பில் கலைப்­பீட மாண­வர்­கள் 5 பேர் படு­கா­ய­ம­டைந்­த­னர். அவர்­க­ளில் 3 பேர் மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து தாமா­கவே வெளி­யே­றிச் சென்­ற­னர். கைக­லப்­பில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் 3 ஆம், 4 ஆம் வரு­டங்­க­ளைச் சேர்ந்த 6 மாண­வர்­கள் தற்­கா­லி­க­மாக பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

விசா­ரணை முடி­யும் வரை அவர்­கள் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­னுள் உள்­வாங்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் பேரா­சி­ரி­யர் இ.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

நேற்­று­முன்­தி­னம் இர­வும் திரு­நெல்­வேலி பர­மேஸ்­வ­ராச் சந்தி உள்­ளிட்ட பகு­தி­க­ளில் மாண­வர்­கள் கைக­லப்­பில் ஈடு­பட்­ட­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கடந்த வார இறு­தி­யில் 3ஆம் 4 ஆம் வருட மாண­வர்­கள் கைக­லப்­பில் ஈடு­பட்­ட­தன் பின்­ன­ணி­யி­லேயே இந்­தக் கைக­லப்பு இடம்­பெற்து என்று கூறப்­பட்­டது. ஆனால் பல்­க­லைக்­க­ழக கலைப்­பீட மாண­வர் ஒன்­றி­யம் அதனை மறுத்­துள்­ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு