கதிர்காமம் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, 13 பெண்கள் உட்பட 58 பேர் கைது


1516502207-police2_Lகதிர்காமம் நகரில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

கதிர்காமம் நகருக்கு அருகில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தும் படி, பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

எனினும், அதனை பொருட்படுத்தாது சென்ற குறித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.

பின்னர், அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து, கதிர்காமம் பொலிஸ் நிலையத்தின் மீது மக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதனால் பொலிஸ் நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைகளுக்காக விஷேட குழு

கதிர்காமம் நகரில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய அப் பகுதிக்கு விஷேட குழுவொன்றை அனுப்புமாறு, பொலிஸ்மா அதிபர் பணித்துள்ளார்.

நேற்று(20) இரவு கதிர்காமம் நகருக்கு அருகில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தும் படி, பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

எனினும், அதனை பொருட்படுத்தாது சென்ற குறித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.

பின்னர், அப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து
  1. BC on January 22, 2018 12:06 am

    சிங்கள அரசின் தமிழர்கள் மீதான இந்த கொலைவெறிக்கு கண்டணம் தெரிவிக்க வேண்டும்


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு