“நாங்களா கைவிட்டம் தமிழீழத்தை?” : பா உ எம் ஏ சுமந்திரன், நாடுகடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாருக்கு பதிலடி!


Pirabaharan_Eelamஅண்மையில் கனடா சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பனர் சுமந்திரன் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பி இருந்தார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்று பெயர்சூட்டிக்டெிகாண்ட உருத்திரகுமாரன், ‘பா உ சுமந்திரன் தமிழ் மக்கள் தமிழீழத்தை கைவிட்டுவிட்டதாக’ கருத்து வெளியிட்டு வருவது தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். அததோடு “சுமந்திரன் அவர்களே! தமிழீழ இலட்சியத்தைக் கைவிடும் ஆணை உங்களுக்கோ அல்லது வேறு எந்தத் தமிழ்த் தலைவர்களுக்கோ கிடையாது” என்றும் எம் ஏ சுமந்திரனுக்கு ஜனவரி 20இல் ரொறன்ரோவில் வைத்து சவால்லிட்டிருந்தார் உருத்திரகுமாரன்.

‘நாங்களா கைவிட்டம் தமிழீழத்தை?’ என்று நாடுகடந்த அரசின் உருத்திரகுமாரனிடம் கேள்வி எழுப்பிய பா உ சுமந்திரன் “தமிழீழ விடுதலைப் புலிகள் அரசாங்கத்தோடு பல வருடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்தப் பேச்சுவார்த்தையில் தமிழீழத்தை எப்படிப் பிரித்துக்கொடுப்பது என்று பேச்சுவார்த்தை நடத்தவில்லை.எல்லைக்கோட்டை எங்கே வரைபது என்றும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஒரு நாட்டுக்குள்ள எப்படியாக அதிகாரத்தைப் பகிர்வது என்பதைப் பற்றித்தான் பேசினார்கள்” என தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே தமிழீழத்தைக் கைவிட்டு ஒரே நாட்டிற்குள் தீர்வைக்காண யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்ததையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் “நாங்களா கைவிட்டம் தமிழீழத்தை. திரு வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் திரு உருத்திரகுமாரன் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேணுமல்லா?” என்றும் உருத்திரகுமாரனை நோக்கி கேள்வி எழுப்பி இருந்தார். அவர் மேலும் தொடர்கையில் ” ‘நீங்கள் என்ன ஒரு நாட்டுக்குள் தீர்வு கேட்கிறதுக்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது” என்று வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் உருத்திரகுமாரன் அன்று ஏன் கேட்கவில்லை என்றும் பா உ சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

தமிழீழத்தைக் கைவிட்டு  “2001 மாவீரர் தின உரையில பிரபாகரன் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வுக்கு தயார் என்று அறிவித்தார். அறிவித்து போர் நிறுத்தத்தையும் அந்த டிசம்பர் மாத்தில ஒரு தலைப்பட்சமாகச் செய்தார்” என்பதைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன் “அந்த நேரத்தில அவரிட்ட ஒருத்தரும் இந்தக் கேள்வியைக் கேட்கேல்லயே. ஏன் இப்ப வந்து ஏன் எங்களிட்ட இந்த கேள்வி கேட்கப்படுகுது” என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியைநோக்கி தமிழீழத்தை கைவிட்டீர்களா என்று கேட்பதை “வெறும் வரட்டு அரசியல்” என்று குற்றம் சாட்டிய பா சுமந்திரன் “தமிழீழத்தை ஒருத்தரும் கோரவில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம். இன்றைக்கு தனிநாடு ஒருவரும் கோரவில்லை. இன்றைக்கு இலங்கையில இருக்கிற தமிழர்களில எவராவது ஒருவராவது தனநாடு வேண்டும் என்ற சொல்பவர் ஒருவராவது இல்லை” என்றும் தெரிவித்தார்.

பா உ சுமந்திரன் மீது எப்போதும் விசனமாகவே உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு தற்போது சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து மிகுந்த எதிர்ப்புணர்வை ஊட்டி இருக்கும் என்பதில் ஐயமில்லை. பா உ சுமந்திரன் இவ்வாறான தன் மீது எதிர்ப்பைக் கொண்டுவரும் கருத்துக்களை வெளியிடுவதில் எவ்வித தயக்கத்தையும் வெளிப்படுத்துவதில்லை.

தமிழரசுக் கட்சியையும் சுமந்திரனையும் தமிழீழத்தை கைவிட்டவர்களாகவும் துரோகிகளாகவும் சித்தரிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தளத்திடம் “வேலுப்பிள்ளை பிரபாகரனே தமிழீழத்தை கைவிட்டு அரசோடு பேச்சுவார்த்தைக்குச் சென்றார்” என்று கூறியிருப்பது பா உ சுமந்திரன் தான் என்னவிதமான சவாலுக்கும் தயார் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

கனடா செல்லும் வழியில் லண்டன் வந்து நிதி சேகரிப்பு நிகழ்விலும் பா உ சுமந்திரன் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டு பா உ சுமந்திரன் தனிப்பட்ட சில நபர்களை மட்டுமே சந்தித்துச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பா உ சுமந்திரனின் வரவுக்கு எதிராக கனடாவிலும் எதிர்ப்பு காட்டப்பட்டு இருந்தது. ஆனாலும் சுமந்திரனின் கனடா நிகழ்வு திட்டமிட்டபடி நடந்தது.

 

உங்கள் கருத்து
  1. BC on January 30, 2018 1:43 pm

    நட்டு கழண்ட தமிழீழ அரசின் பிரதமரிடம் மதிப்புக்குரிய இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேட்ட கேள்விகள் அவ்வளவும் நியாயமானது தான்.
    இந்த அரசியலமைப்பு விடயத்தில் இந்த அரசாங்கம் தவறுமாக இருந்தால் துரோகம் இழைக்குமாக இருந்தால் நட்டு கழண்ட தமிழீழ அரசு தனிநாடு சாத்தியமாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.நாம் படிப்படியாகத்தான் போக வேண்டும். இப்படி சுமேந்திரன் சொன்னதாக சொல்லி என்று மீண்டும் அழிவு போரை ஏற்படுத்த முயற்ச்சிக்கிறார்கள்
    உண்மையில் சுமந்திரன் அப்படி சொன்னாரா?


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு