பயங்கரவாத தடைச்சட்ட விவகாரம்; இலங்கை மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு


human-rightsபயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற தவறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

இந்தச் சட்டத்தினால், குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் சந்தேக நபர்கள் பலர், ஆண்டுக் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துடன் இது சம்பந்தமாக அனைத்து பேச்சுவார்த்தைகளையும் நடத்திய போதிலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாக்க எண்ணினால், இந்த சட்டத்தை சர்வதேச தரத்திற்கு அமைய உருவாக்க வேண்டும் என கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் பிரடி அடம்ஸ் கூறியுள்ளார்.

இலங்கை தொடர்பாக 46 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில், இலங்கையில் சித்திரவதைகளை மேற்கொள்ள இந்த சட்டம் பிரதானமாக உதவி வருவதாக கூறியுள்ளது. இந்த சட்டம் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சட்டத்தை மாற்றுவதாக இலங்கை அரசாங்கம் கூறியது. இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையிலும் அரசாங்கம் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளது எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு