மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜரானார் ஊவா மாகாண முதலமைச்சர்


images-1-1ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணையின் இரண்டாம் கட்டம் இன்று (01) இடம்பெறுகின்றது.

இன்றைய தினம் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேர்தல் பணிகள் காரணமாக இன்றைய தினம் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக முடியாது என்று ஊவா மாகாண முதலமைச்சர் எழுத்து முலம் அறிவித்ரைுந்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியது.

எனினும் அந்தக் கோரிக்கையை எற்றுக் கொள்ள முடியாது என்றும் இன்றைய தினம் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறும் ஊவா மாகாண முதலமைச்சருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி சம்பவம் தொடர்பில் வாக்குமுலம் வழங்குவதற்காக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க சற்றுமுன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியதாக எமது செய்தியாளர் கூறினார்.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமுலம் வழங்குவதற்காக பதுளை வலய கல்விப் பணிப்பாளர் சரத் ரணசிங்க மற்றும் பதுளை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஈ.எம்.வீ. தென்னகோன் ஆகியோருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு