லசந்த கொலை தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது


Lasantha_Wickrematungeசண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகப் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை இடம்பெற்ற காலத்தில் கல்கிஸ்ஸ காவல் நிலையத்தில் குற்ற விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றிய துணை காவல்துறைப் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

லசந்த கொலை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் போது கிடைக்கப் பெற்ற சில சாட்சியங்களை இந்த காவல்துறை உத்தியோகத்தர் மூடி மறைத்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் கொலை தொடர்பான மிக முக்கியமான சில சாட்சியங்கள், ஆதாரங்கள் என்பனவற்றை உத்தியோகப் பற்றற்ற அடிப்படையில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த காவல்துறை உத்தியோகத்தரை இன்றைய தினம் கைது செய்த போது, அவர் காவல்துறை சேவையிலிருந்து ஒய்வு பெற்றுக்கொண்டிருந்தார் என காவல்துறைத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளைய தினம் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் நீதிமன்றின் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு