உள்ளுராட்சி தேர்தல் பிரச்சாரங்களில் இருப்பதனால் சுதந்திர தின நிகழ்வுகளில் சம்மந்தன் இல்லை


a6f838f0ef99ef2a7fcab07e1231e40e_Lஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்கமாட்டார் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் நாளை காலை இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன.

பிரித்தானிய இளைவரசர் எட்வேர்ட் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார்.

எனினும், சுதந்திர தின விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனோ, அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேறு பிரதிநிதிகளோ பங்கேற்கமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளதால், சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க முடியாதிருப்பதாக, இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையின் சுதந்திர தின நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பதாக வெளியான செய்திகளை, கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் மறுத்துள்ளார்.தேர்தல் பரப்புரைகள் காரணமாகவே நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு