காணாமல் போனோர் பணியக செயற்பாடு குறித்து சிவில் அமைப்புக்கள் கவலை


kaanaamalகாணாமல் போனோர் தொடர்பான பணியகத்தை செயற்படுத்துவதில் நிலவும் தாமதம் குறித்து சிவில் அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 சிவில் அமைப்புக்கள் மற்றும் தனியாட்கள் இணைந்து கையெழுத்திட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான பணியத்தை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், அதன் உறுப்பினர்களை நியமிக்க இன்னும் நடவடிக்கை எடுக்காமை குறித்து கவலை வெளியிடுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த உறுப்பினர்களின் நியமனமானது வெளிப்படைத் தன்மையுடன் இடம்பெற வேண்டும் என அரசியலமைப்பு பேரவையிடமும், ஜனாதிபதியிடமும் சிவில் அமைப்புக்கள் கோரியுள்ளன.

குறித்த உறுப்பினர்களின் நம்பகத்தன்மை, அனுபவம் மற்றும் நிபுணத்துவம் என்பனவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் சிவில் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு