மஹிந்த மிரட்டல் விடுத்தார்” – திருமலையில் சம்பந்தன்


sampantan-n-mr-720x450-12011ஆம் ஆண்டு பேச்­சுக்கு என்னைத் தனது மாளி­கைக்கு அழைத்து மிரட்­டும் வகை­யில் முன்­னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்ச நடந்து கொண்­டார். அவர் மட்­டு­மல்ல, அங்­கி­ருந்­த­வர்­கள் எல்­லோ­ரும் என்­னைப் பய­மு­றுத்­தும் வகை­யி­லேயே செயற்­பட்­டார்­கள். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் பர­ப­ரப்­புக் குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்ளார்.

திரு­கோ­ண­ம­லை­யில் இடம்­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

பேச்­சுக்கு கூட்­ட­மைப்பை அழைத்­த­போ­தும் கூட்­ட­மைப்பு பேச்­சுக்கு வர­வில்லை என்று மகிந்த ராஜ­பக்ச யாழ்ப்­பா­ணத்­தில் வைத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார். அதற்­குப் பதில் வழங்­கி­யுள்ள கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­த­தா­வது-,

இது தொடர்­பில் மக்­கள் உண்­மையை அறிந்து கொள்­ள­வேண்­டும். 2009ஆம் ஆண்டு போர் முடிந்த சில நாட்­க­ளின் பின்­னர் ஐ.நா. பொதுச் செய­லர் இலங்­கைக்கு வந்­தார். ஐ.நா. பொதுச் செய­ல­ருக்கு மகிந்த வாக்­கு­று­தி­களை வழங்­கி­னார்.
பொறுப்­புக் கூறல் சம்­பந்­த­மாக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும், அர­சி­யல் தீர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்டு அது நிறை­வேற்­றப்­ப­டும் என்று கூறி­யி­ருந்­தார். அவை நிறை­வேற்­றப்­ப­டாத கார­ணத்­தால் இந்­தியா, அமெ­ரிக்கா போன்ற நாடு­கள் அதை நிறை­வேற்ற வேண்­டும் என்ற கோரிக்­கை­களை முன்­வைத்­தார்­கள். மகிந்த ராஜ­பக்ச இந்­தி­யா­வுக்கு அழைக்­கப்­பட்டு, இந்­திய தலைமை அமைச்­சர் மன்­மோ­கன் சிங் இது தொடர்­பில் பேசி­யி­ருந்­தார்.

அமெ­ரிக்­கா­வின் இரா­ஜாங்க உத­விச் செய­லர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்­கைக்கு இந்­தக் காலத்­தில் வந்­தி­ருந்­தார். அவர் என்­னைச் சந்­திக்க வேண்­டும் என்­றார். ஒரு நாள் காலை­யில் சந்­தித்­தேன். அப்­போது பிளேக் கூறி­னார், சம்­பந்­தன் உங்­க­ளு­டைய அரச தலை­வர் (மகிந்த) ஒரு நாளும் மாற­மாட்­டார். அவரை நான் நேற்­றுப் பின்­னே­ரம் சந்­தித்­தேன்.

பழைய பாணி­யில்­தான் பேசு­கின்­றார். அவர் மாறு­வார் என்று நான் நினைக்­க­வில்லை என்று ரொபேர்ட் ஓ பிளேக் கூறி­னார். நான் பிளேக்­கு­டன் பல விட­யங்­கள் சம்­பந்­த­மா­கப் பேசி­னேன். எமது நிலைப்­பாட்டை அவ­ருக்­குத் தெளி­வா­கக் கூறி­னேன். சந்­திப்பை முடித்­துக்­குக் கொண்டு வந்­தேன்.

அன்று மாலை அப்­போ­தைய அரச தலை­வ­ராக இருந்த மகிந்த என்னை அலை­பே­சி­யில் அழைத்­தார். சம்­பந்­தன் இன்று நீங்­கள் பிளேக்­கைச் சந்­தித்­தா­கக் கேள்­விப்­ப­டு­கின்­றேன். என்ன பேசி­னீர்­கள் என்று கேட்­டார். பேச­வேண்­டிய எல்லா விட­யங்­க­ளை­யும் பேசி­னேன் என்று கூறி­னேன். அதன் பின்­னர் மகிந்த, அவரை (பிளேக்கை) நான் நேற்­றுச் சந்­தித்­தேன்.

அர­சி­யல் தீர்வு சம்­பந்­த­மா­கப் பேசி­னார். அப்­போது நான் பிளேக்­கி­டம் கூறி­னேன், அர­சி­யல் தீர்வு சம்­பந்­த­மான விட­யங்­க­ளில் உங்­க­ளின் உதவி தேவை­யில்லை. அதனை எங்­க­ளுக்கு கண்­டு­கொள்­ளத் தெரி­யும் என்று பிளேக்­கி­டம் தெரி­வித்­த­தாக என்­னி­டம் சொன்­னார்.

அந்­தக் காலத்­தில்­தான் அமெ­ரிக்கா ஒரு முடிவு எடுக்க ஆரம்­பித்­தது. மகிந்த தரப்­புக்கு ஒரு பாடம் படிப்­பிக்­க­வேண்­டும் என்ற முடிவை எடுத்­தது.

2010ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் மகிந்­த­வுக்­கும் எனக்­கும் இடை­யில் தனிப்­பட்ட சந்­திப்பு இடம்­பெற்­றது. சுமார் 40 நிமி­டங்­கள் அவ­ரி­டம் நான் பல விட­யங்­க­ளைப்­பற்றி பேசி­னேன். குறிப்­பாக மக்­களை மீள்­கு­டி­ய­மர்த்­து­வது தொடர்­பில் பேசி­னேன். அமை­தி­யா­கப் பொறு­மை­யாக எல்­லா­வற்­றை­யும் கேட்­டுக் கொண்­டி­ருந்­தார். அர­சி­யல் தீர்வு காணப்­ப­டும் என்று நீங்­கள் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கின்­றீர்­கள்.

அது நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டும். அதைக் காண்­ப­தற்கு உங்­க­ளுக்­கும் எங்­க­ளுக்­கும் இடை­யில் பேச்சு நடத்­தப்­ப­ட­வேண்­டும் என்று கூறி­யி­ருந்­தேன். ஒரு வார்த்­தை­கூட பதி­லுக்கு மகிந்த பேச­வில்லை.

தனது உத­வி­யா­ளரை அழைத்து, ஜி.எல்.பீரிஸ் வெளியே இருக்­கின்­றார். அவரை வரச் சொல்­லுங்­கள் என்று கூறி­னார். ஜி.எல்.பீரிஸ் வந்­த­தும், சம்­பந்­தன் அர­சி­யல் தீர்வு சம்­பந்­த­மாக பேசு­கின்­றார். பேச்சை ஆரம்­பிக்­க­வேண்­டும் என்று சொன்­னார்.

இது சம்­பந்­மாக அப்­போ­தைய இந்­தி­யத் தலைமை அமைச்­சர் அவ­ரு­டன் பேசி­யி­ருந்­தார். எங்­க­ளுக்­கும் அவர்­க­ளுக்­கும் இடை­யி­லான பேச்சு 2011ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஆரம்­ப­மா­னது. ஒரு­மித்த நாட்­டுக்­குள் அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பில் முத­லா­வது பேச்சு மேசை­யி­லேயே நாங்­கள் கூறி­யி­ருந்­தோம்.

எழுத்­து­மூ­ல­மாக எங்­கள் கோரிக்­கை­க­ளைக் கேட்­டார்­கள். சமர்ப்­பித்­தோம். மார்ச் மாதம் கொடுத்­து­விட்டு அவர்­க­ளின் பதிலை நாங்­கள் கேட்­டோம். பதிலை தந்­தால்­தான் அடுத்­துப் பேச­லாம் என்­றும் சொன்­னோம்.

ஜூலை மாதம் வரை­யில் பதில் வழங்­க­வில்லை. ஓகஸ்ட் மாதம் நாம் அவர்­க­ளுக்­குச் சொன்­னோம், நான்கு மாதங்­க­ளாக நீங்­கள் பதில் தர­வில்லை. நாங்­கள் பொறு­மை­யா­கக் காத்­துக் கொண்­டி­ருக்­கின்­றோம்.

நீங்­கள் பதில் தரா­விட்­டால் என்ன செய்­வது என்­பது எங்­க­ளுக்­குத் தெரி­யும். பேச்சு முடி­வ­தற்­குள் பதில் வேண்­டும் என்று கேட்­டோம். உங்­கள் பதிலை தரா­மல் அடுத்த பேச்­சுத் திக­தியை நிர்­ண­யிப்­பதை நாங்­கள் விரும்­ப­வில்லை என்று சொன்­னோம். திகதி நிர்­ண­யிக்­கப்­ப­ட­வில்லை.

அடுத்த நாள் காலை மகிந்த ராஜ­பக்ச என்­னி­டம், நீங்­கள் பேச்­சி­லி­ருந்து வெளி­யே­றி­விட்­டீர்­கள். தயவு செய்து நான் உங்­க­ளைச் சந்­திக்க விரும்­பு­கின்­றேன். வாருங்­கள் என்று அழைத்­தார். நான் சென்­றேன். பதில் தர­வேண்­டும். பதில் தரா­விட்­டால் பேச்சு நடத்­து­வ­தில் எந்­தப் பய­னும் இல்லை. எழுத்­தில் எமது நிலைப்­பாட்­டைக் கூறி­யி­ருக்­கின்­றோம். அதற்­குப் பதில் நீங்­கள் எழுத்­தில் தர­வேண்­டும் என்று நான் கூறி­னேன்.

பதில் தர­மு­டி­யாது என்­றும், தந்­தால் அது பல பிரச்­சி­னை­களை உரு­வாக்­கும் என்­றும் மகிந்த சொன்­னார். இதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அர­சும், நாங்­க­ளும் பேசு­கின்­றோம். எங்­கள் நிலைப்­பாட்டை தெளி­வா­கச் சொல்­லி­யி­ருக்­கின்­றோம். அதற்­குப் பதில் வர­வேண்­டும். பதில் தர­மு­டி­யாது. என்னை மன்­னிக்க வேண்­டும் என்று மகிந்த சொன்­னார்.

சரி உங்­க­ளுக்­குப் பதில் தர­மு­டி­யா­விட்­டால், 13ஆவது அர­ச­மைப்­புத் திருத்­தம் நிறை­வேற்­றப்­பட்ட பின்­னர் முன­சிங்க அறிக்கை, சந்­தி­ரிகா அம்­மை­யார் காலத்து தீர்­வுத் திட்­டம், தலைமை அமைச்­சர் ரணில் காலத்து திட்­டம், உங்­க­ளின் காலத்து அர­சி­யல் தீர்­வுத் திட்­டம் ஆகி­யவை எழுத்­தில் உள்­ளன.

அவை பேச்சு மேசைக்கு வர­வேண்­டும். நீங்­கள் பதில் தரா­விட்­டா­லும், அவை பேச்சு மேசைக்கு வந்­தால் பேச்­சைத் தொட­ரத் தயார் என்று கூறி­னேன். நீண்ட விவா­தத்­துக்­குப் பின்­னர் அத­னைச் செய்­யத் தயார் என்று கூறி­னார் மகிந்த.

அதன் பின்­னர் பேச்சு ஆரம்­ப­மா­னது. பேசி­னோம். ஒரு விட­யத்­தி­லும் இணக்­கப்­பாடு இல்லை. டிசெம்­பர் மாதம் வரை பேச்சு தொடர்ந்­தது. பின்­னர் பேச்சு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. 2012ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் மூன்று நாள்­கள் பேச்சு திகதி நிர்­ண­யிக்­கப்­பட்­டது. மூன்று தினங்­க­ளும் நாங்­கள் பேச்­சுக்­குச் சென்­றோம். அவர்­கள் வர­வில்லை. இது­தான் உண்மை.

தெரி­வுக்­குழு நிய­மித்து, தெரி­வுக் குழு­வுக்கு வரு­மாறு மகிந்த கேட்­டார். என்னை நேர­டி­யா­கச் சந்­தித்­துப் பேசி­னார். தெரி­வுக்­கு­ழு­வுக்கு வரு­மாறு அவர் கேட்­டார். நானும் நீங்­க­ளும் பேசி சில முக்­கி­ய­மான விட­யங்­க­ளில் ஓர் இணக்­கத்­துக்கு வர­மு­டி­யா­மல் இருக்­கின்ற சூழ­லில் நான் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வந்து என்ன பிர­யோ­ச­னம். அங்கே என்ன நடக்­கப் போகின்­றது.

நீங்­கள் விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில போன்­ற­வர்­க­ளை­யும் தூண்­டி­விட்டு எதிர்க்­கச் சொல்­லிச் சொல்­வீர்­கள். ஒன்­றும் நடை­பெ­றாது. நானும் நீங்­க­ளும் பேசி சில முக்­கிய விட­யங்­கள் தொடர்­பில் உடன்­பாடு ஏற்­ப­டு­மாக இருந்­தால் நான் வரத் தயார் என்று மகிந்­த­வி­டம் கூறி­னேன். இல்­லை­யெ­னில் நான் வர­மாட்­டேன் என்­றும் தெரி­வித்­தேன்.

சில வாரங்­க­ளின் பின்­னர் என்னை மீண்­டும் மகிந்த அழைத்­தார். என்­னைப் பய­மு­றுத்­தும் வகை­யில் அவ­ரது மாளி­கை­யில் இருந்த எல்­லோ­ரும் என்­னு­டன் நடந்­து­கொண்­டார்­கள். தெரி­வுக்­கு­ழு­வுக்கு வரா­விட்­டால் உமக்கு ஆபத்து ஏற்­ப­ட­லாம் என்று சொன்­னார். என்­னு­டைய கருத்தை நான் உங்­க­ளுக்­குச் சொல்­லி­யி­ருக்­கின்­றேன்.

நானும் நீங்­க­ளும் பேசி ஓர் ஒழுங்­குக்கு வரா­விட்­டால் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வரு­வ­தில் என்ன பிர­யோ­ச­னம். ஆனால், இந்த விட­யம் சம்­பந்­த­மாக நான் முடி­வெ­டுக்க முடி­யாது. எனது கட்சி முடி­வெ­டுக்­க­வேண்­டும். எனது கட்­சி­யின் முடிவை மீறி நடக்க முடி­யாது என்று மகிந்த தரப்­பி­டம் கூறி­னேன்.

தெரி­வுக்­குழு ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. அதன் பின்­னர் சில முயற்­சி­கள் நடந்­தன. அது­வும் கைகூ­ட­வில்லை. அர­சி­யல் கட்சி என்ற வகை­யில் எங்­க­ளால் முடிந்­த­வற்றை நாம் செய்­தோம். இதை மகிந்த ராஜ­பக்ச மறந்­தி­ருக்க முடி­யாது.

எங்­க­ளு­டைய மக்­க­ளுக்கு ஏற்­பில்­லாத தீர்வை நாங்­கள் ஒரு­போ­தும் ஏற்­க­மாட்­டோம். எமது மக்­க­ளின் பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமை­யாத ஒரு தீர்வை நாங்­கள் ஒரு­போ­தும் ஏற்­க­மாட்­டோம் – என்­றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு