நாகரீகமான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முன்வாருங்கள் – முன்னாள் எம்பி சந்திரகுமார்.


IMG_6982கிளிநொச்சியில் ஒரு நாகரீகமான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சி ஸ்கந்தபுரம்  பொதுச் சந்தையில் அக்கராயன் வட்டாரத்தில்  சுயேட்சைக்குழுவாக கேடயச் சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
இலங்கையில் பிரதேச சபை தேர்தல் அரசியலின் அடிப்படை இதிலிருந்தே அடுத்தடுத்த கட்டங்களான மாகாண சபை, பாராளுமன்றம் என விரிவடைந்து செல்கிறது. ஆகவே அடிப்படையிலேயே நாகரீகமான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால் மக்கள்  பிரதேச சபை தேர்தல்களில் தங்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்கின்றவர்களின் ஒழுக்கம், நடத்தை, அவர்களின் செயற்திறன், போன்றவற்றை கருத்தில் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் அப்போதே நாங்கள் அடிப்படையில் ஒரு நாகரீகமான அரசியலை கட்டியெழுப்ப முடியும். தவறினால் எங்களின் தெரிவுகள் மூலம் நாங்களே எங்களின் எதிர்காலத்திற்கும், எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும்  ஆரோக்கியமற்ற ஒரு சூழலை, உருவாக்கி விட முடியாது எனத் தெரிவித்த  அவர்.
தேர்தல் காலங்களில் தேர்தல் மேடைகளிலும், மக்கள் மத்தியிலும் சென்று தங்களின் கொள்கைகள், மற்றும் செயற்பாடுகள் பற்றியும், கடந்த காலங்களில் தங்களின் செயற்பாடுகள் பற்றியும் எதிர்காலத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்வோம் என்றும்  சொல்லி வாக்குகளை பெற வேண்டும்  ஆனால் கிளிநொச்சியில் இதற்கப்பால்  தேர்தல் மேடைகளில் என்னைப் பற்றியும், எனது அமைப்பைச் சார்ந்தவர்கள் பற்றியும், முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்பியும் கேவலமான வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் கிளிநொச்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஈடுப்பட்டுள்ளனர், தமிழர் பிரதேசங்களில் வேறு எங்கும் இடம்பெறாத ஒரு அநாகரீகமான அரசியல் கலாசாரம் கிளிநொச்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனவும் குற்றம் சுமத்திய அவர்
எனவே நாங்கள் எங்கள் வருங்கால சந்ததியினருக்கா ஒரு நாகரீகமான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவது காலத்தின் கட்டாயம் ஆகவே அந்த காலத்தின் தேவையை உணர்ந்து நாகரீகமான அரசியல் கலாசாரத்தை உருவாக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்
 முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஓஸ்மன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  அக்கராயன் வட்டார வேட்பாளர் சிவசோதி மற்றும் கோணாவில் வட்டார வேட்பாளர் உதயகுமார், உருத்திரபுரம் வட்டார வேட்பாளர் இராமச்சந்திரன் மற்றும் பெருமளவு பொது மக்கள்  ஆகியோரும் கலந்துகொண்டனர்

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு