அலோசியஸ் மற்றும் கசுன் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில்


1517810103-arjuna-alosiyas-Lமத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் எதிர்வரும் 16ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (05) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

2016 ம் ஆண்டு மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி செய்த முறைப்பாடு தொடர்பாக நேற்று (04) குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களுக்காக சார்பாக பேசிய ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ, நீதிமன்றத்திடம் பிணை வழங்க கோரியிருந்தார்.

அதன்படி பிணை கோரிய மனுவை இரண்டு நாட்களுக்குள் எழுத்து மூலமாக ஒப்படைக்குமாரு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டதுடன் எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணை செய்யப்பட்டும் என உத்தரவிட்டார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு