சுதந்திரதின நாள் ஆர்ப்பாட்டத்திற்கு போட்டி உரிமைகோரல்கள்!


Priyanka_Fernando_SL_Embassyபெப்ரவரி 04 இலங்கை சுதந்திரதினத்தை பகிஸ்கரித்து லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாக தமிழ் சொலிடாரிட்டி ஒரு ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தது. அதில் தங்களின் பெயர்களை சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று நாடுகடந்த தமிழீழம் பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் பினாமி அமைப்புகள் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அந்த ஆர்ப்பாட்டத்திற்கு புலிக்கொடிகள் சகிதம் பல கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்களைப் பார்த்து இலங்கைத் தூதரகத்தில் இருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னானடோ கழுத்தை வெட்டுவதாக தன் விரலால் சைகை செய்ததை தமிழ் சொலிடாரிட்டியினர் பதிவு செய்து அதனை சர்ச்சைக்குரிய விடயமாக மாற்றியதுடன் குறிப்பிட்ட இராணுவ அதிகாரிக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த வெற்றியை அடுத்து நாடுகடந்த தமிழீழ அரசு பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற அமைப்புகள் அந்த ஆர்ப்பாட்டத்தை தாங்கள் நடத்தியதாக உரிமைகோரி வருகின்றனர். உண்மையில் நாடுகடந்த அரசு இலங்கைத்தூதரகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்துவதைத் தவிர்த்து பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாகவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எண்பதுக்களில் விடுதலை இயக்கங்கள் ஆரம்பிக்கப்ட்ட காலங்களில் பொலிஸார் – இராணுவத்தினர் மீது நடாத்தப்படும் தாக்குதல்களுக்கு இயக்கங்கள் போட்டி போட்டுக்கொண்டு உரிமை கொண்டாடுவார்கள். இந்நிலை இப்போது லண்டனில் ஏற்பட்டு உள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற பெரும்பாலான மனித உரிமை மீறல்கள் சிங்கக் கொடியின் கீழும் புலிக்கொடியின் கீழுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து
  1. BC on February 10, 2018 3:43 pm

    //சுதந்திரதின நாள் ஆர்ப்பாட்டத்திற்கு போட்டி உரிமைகோரல்கள்!//
    இலங்கை தமிழர்களுக்கு
    நாடுகடந்த தமிழீழ அரசு பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற அமைப்புகளிளின் மோசடிகளை தெரிவித்த தேசம்நெற்றுக்கு மிக்க நன்றி.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு