பிரியங்க பெர்னான்டோ சரியான சமிக்ஞையையே காண்பித்துள்ளார் – ருவான் விஜேவர்த்தன தெரிவிப்பு


ruwan-wijewardeneபுலம்பெயர் தமிழர்களுக்கு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, சரியான சமிக்ஞையையே காண்பித்துள்ளார் என்றும் அதற்காக அவரை ஆதரிப்பதாகவும், இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி தலையிட்டு பிரித்தானியாவிலேயே இருக்குமாறு அவரைக் கேட்டுள்ளார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நான் இதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

விடுதலைப் புலிகள் ஆதரவு குழுவுக்கு அவர் காண்பித்த சமிக்ஞைக்காக பிரிகேடியருக்கே எனது வாக்கு. அவருக்கு நன்றி கூறுகிறேன்.

அங்கு எதிர்ப்புத் தெரிவித்த விடுதலைப் புலிகள் எவருமே, இலங்கைக்கு வந்தவர்களில்லை என்று நினைக்கிறேன்.

அவர்கள் பல்வேறு அமைப்புகளுக்காக நிதி சேகரிக்கிறார்கள். அவர்கள் தமிழர்களை நேசிப்பதில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு