58 உள்ளூராட்சி சபைகளில், 46 சபைகளைக் கூட்டமைப்பு கைப்பற்றும் – சுமந்திரன் நம்பிக்கை


Sumanthiranநாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 46 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரியளவிலான எதிர்ப்புகளைச் சந்திக்கவில்லை.

பல்வேறு கூச்சல்கள் எழுப்பப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே இருக்கின்றனர்.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் போட்டியிடுகின்ற 58 உள்ளூராட்சி சபைகளில், 46 சபைகளைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு