இந்­தியா செல்­கிறார் பிர­தமர் ரணில்


201704251906315266_Sri-Lankan-PM-Ranil-Wickramasinghe-arrives-in-New-Delhi_SECVPFபிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இம்­மாதம் அளவில் இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­ய­வி­ருப்­ப­தாக பிர­த­மர் அலு­வலக அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் நட­வ­டிக்­கைகள் நிறை­வ­டை­ய­வுள்­ளன. தேர்தல் முடிவின் பின்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முக்­கிய சில பேச்­சு­வார்த்­தை­களை   நடத்தும் நோக்கில் இம்­மாத  நடுப்­ப­கு­தியில்  இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­ய­வுள்ளார்.

இதன்­படி பெரும்­பாலும்  அடுத்த வார­ம­ளவில் இந்­தி­யா­வுக்கு பய­ணிக்க கூடும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­தியா விஜ­யத்தின் போது மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுடன் இணைந்து அபி­வி­ருத்தி செய்­வது   தொடர்­பி­லான முக்­கிய பேச்­சு­வார்த்­தை­களில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கலந்து கொள்வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் இந்­தி­யா­வுடன் கைச்­சாத்­தி­டு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ள எட்கா ஒப்­பந்தம் தொடர்­பிலும் இந்த விஜ­யத்தின் போது பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பின்னர் பல தடவைகள் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு