கிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வசம்


kilinochchi - Copyஇன்று இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத்தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளையும்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 21 வட்டாரங்களில் 16 வட்டாரங்களில்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், 05 வட்டாரங்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரமாரின் சுயேட்சைக் குழுவும்  வெற்றிப்பெற்றுள்ளது.
பச்சிலைப்பள்ளியில்  எட்டு வட்டாரங்களில் 6 வட்டாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், 2 வட்டாரங்களில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரமாரின் சுயேட்சைக் குழுவும்  வெற்றிப்பெற்றுள்ளது.
பூநகரி பிரதேச சபையில் 11 வட்டாரங்களில் அனைத்து வட்டாரங்களையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றிப் பெற்றுள்ளது.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு