2020 ஆம் ஆண்டு வரை நல்­லாட்சி அர­சாங்­கம் தொடரும் என்கிறார் ரணில்


ranil-2நல்­லாட்சி அர­சாங்­கத்தை 2020 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தும் முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­ சிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் முடி­வுகள் தேசிய அர­சாங்­கத்­திற்கு வழங்கியுள்ள செய்தியை எதிர்­வரும் நாட்­களில் சில­பல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பான முடி­வு­களை எடுக்­கலாம்.

எனினும் நல்­லாட்சி அர­சாங்­கத்தை 2020 ஆம் ஆண்டு பத­விக்­காலம் பூர்த்தி ஆகும்வரை முன்கொண்டு செல்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

மக்களின் கருத்தையும் ஆணையையும் தமது கட்சி முழுமையாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த அவர் இந்த முடிவுகள் தமது கட்சிக்கு ஒரு எச்சரிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கட்சியில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து திருத்தமான துரிதமான பயணமொன்றை தமது கட்சி முன்னெடுக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பல சேவைகள் பலருக்கு இதுவரை தென்படவில்லை இந்த சேவைகளின் நன்மைகள் விரைவில் பொதுமக்களை போய்ச் சேரும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தாமதமான கருமங்களையும் மாற்றியமைத்து வெற்றியை நோக்கி செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு