தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் இணையும் கருணா அம்மான்


1518518874-karuna-ammanதற்போது இருக்கும் மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக பதிவி விலகி மக்களின் ஆணையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சியானது அதிக உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றியதை பாராட்டி நேற்று கிரானில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் இளைஞர் அணியினரினால் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது ஐக்கிய முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நிகழ்வில் கலந்து கொண்டு தனது கருத்தை இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தனது கருத்தை தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதியின் கட்சியானது அதிகளவு உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றி பாரிய வெற்றி பெறும் என்று கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பே ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவித்திருந்தேன்.

இன்று ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறனதொரு தேர்தல் பின்னடைவு முடிவுகள் பெற்றிருந்தால் அதிகாலையிலேயே பதவி விலகி இருப்பார்கள். 340 உள்ளூராட்சி மன்றங்களில் 232 ஆசனங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சி கைப்பற்றியுள்ளமை பாராட்டத்தக்கது.

பிரதேச மக்கள் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். எனது கட்சியான தமிழர் ஐக்கிய முன்னணி மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 ஆசனங்களை பெற்றுள்ளது. இது எனக்கு கிடைத்த வெற்றியாகும். எனது கட்சி ஆரம்பித்து ஒரு வருட காலமாகும். எனது கட்சி எதிர் நோக்கிய கன்னித் தேர்தலாகும்.

அதை மக்கள் அங்கீகரித்துள்ளனர். அதையிட்டு பெருமைப்படுகின்றேன். எதிர்காலத்தில் சிறந்ததொரு அரசியல் காய் நகர்வை நகர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளேன். இதன் பிரகாரம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் பிரதித் தலைவர் நா. திரவியம் (ஜெயம்) என்னுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்.

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் எமது இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டுள்ளோம். ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு சகோதர இனத்தை பலப்படுத்துவதில் அக்கறையாக உள்ளது. இவர்களுக்கு நல்லதொரு பாடம புகட்ட வேண்டும் என்றார்.

உங்கள் கருத்து
  1. Jeyabalan T on February 14, 2018 11:52 pm

    அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தினமான பெப்ரவரி 14 இன்று கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற காதலர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் இடம்பெற்ற மோசமான துப்பாக்கிக் கொலைச் சம்பவத்தில் இத்தாக்குதலும் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் ஈடுபட்ட கொலையாளி 19 வயதான


  2. Vijay Rasalingam on February 15, 2018 6:55 pm

    கருணா அம்மானுக்கும் புளோரிடாவுக்கும் என்ன சம்பந்தம்?


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு