80 வீதமான வடக்கு கிழக்குத் தமிழர்கள் மத்திய அரசுடனான இணக்க அரசியலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்!


Sambanthan_Raising_Sri_Lankan_Flagவடக்கு கிழக்கில் வாக்களித்த தமிழர்கள் ஈழ மக்கள் 1990 க்களின் முற்பகுதியிலிருந்து முன்வைத்து வருகின்ற மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதனை நோக்கிய இணக்க அரசியலுக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். தற்போதைய இணக்க அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழரசுக் கட்சி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பனவற்றுக்கு எதிராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசியப் பேரவை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆதரவுக் குழுவினர் எழுக தமிழ் குழு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் குழுவினர் எதிர்பார்த்த மக்கள் ஆதரவைப் பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் மட்டும் ஒரு குறிப்பிட்ட உயர் சமூகப் பிரிவினரின் ஆதரவையே பெற்றுள்ளனர்.

வடமாகாணத்தில் கட்சிகள் பெற்ற ஆசனங்கள்:

266 இலங்கைத் தமிழரசுக்கட்சி
94 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
92 ஐக்கிய தேசியக் கட்சி
88 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
70 சிறிலங்கா சுதந்திரக் கட்சி
44 தமிழர் விடுதலைக் கூட்டணி
24 சிறிலங்கா பொதுஜன பெரமுன
12 சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்
52 சுயேட்சைக் குழுக்களும் ஏனைய கட்சிகளும்

742 மொத்த ஆசனங்கள்

கிழக்கு மாகாணத்தில் கட்சிகள் பெற்ற ஆசனங்கள்:

180 ஐக்கிய தேசியக் கட்சி
151 சிறிலங்கா பொதுஜன பெருமுன
138 இலங்கைத் தமிழரசுக் கட்சி
83 சிறிலங்கா சுதந்திரக் கட்சி
70 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
50 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
33 சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்
31 தமிழர் விடுதலைக் கூட்டணி
25 தேசிய காங்கிரஸ்
14 நல்லாட்சிக்காண தேசிய முன்னணி
10 அகில இலங்கை தமிழ் காங்கரஸ்
8 முஸ்லீம் தேசிய கூட்டமைப்பு
4 ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி
3 தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி
75 ஏனைய கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும்

875 மொத்த ஆசனங்கள்

நடந்து முடிந்த தேர்தல் பற்றிய விரிவான கலந்துரையாடலின் ஒளிப்பதிவு இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு