அமெரிக்க உயர் கல்லூரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்!


Trump_and_Gunஅமெரிக்காவின் புளொரிடா மாநிலத்தில் கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சுட்டுச் சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். காதலர் தினமான பெப்ரவரி 14 இன்று இடம்பெற்ற இத்துப்பாக்கிச் சுட்டுச் சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்று வரும் மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒன்றெனத் தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் கொல்லப்பட்டு உள்ளனர்.

கொலையாளி ஆகக் கூடிய அழிவை ஏற்படுத்தும் நோக்கிலேயே தாக்குதலை திட்டமிட்டு உள்ளார் எனத் தெரியவருகின்றது. கூடுதலான குண்டுகளுடன் காஸ் மாஸ் உம் அணிந்து வந்து புகைகிளப்பும் கைக்குண்டை எறிந்து தீ எச்சரிக்கை மணியை ஒலிக்க வைத்துவிட்டு மாணவர்கள் தொகையாக வெளியே வரும் போது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றது.

தாக்குதலை நடத்தியவர் அக்கல்லூரியின் மாணவர் என்றும் அவருடைய நடத்தை காரணமாக பாடசாலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டு இருந்தவர் என்றும் தெரியவருகிறது. கொலையாளி சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 19 வயதான இக்கொலையாளியாகிய இந்த மாணவனை எது இவ்வாறு செய்யத் தூண்டியது என்பது இதுவரை தெரியவரவில்லை. ஆனால் இன்னும் ஓரிரு தினங்களில் தெரியவரலாம்.

வழமையாக இவ்வாறான கொலையாளிகள் தன்னைத் தானே சுட்டுக்கொல்வார்கள் அல்லது பொலிஸாருடன் துப்பாக்கிச் சுட்டில் ஈடுபட்டு கொல்லப்படுவார்கள். ஆனால் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மாணவன் துப்பாக்கிச் சுட்டுசம்பவத்தைத் தொடர்ந்து தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸாரல் கைது செய்யப்பட்டு உள்ளார். பொலாஸாருடன் மோத முயற்சிக்கவில்லை. தொடர்ந்தும் தான் வாழ்வதற்கு இந்த மாணவன் திட்டமிட்டு இருந்ததாக நம்பப்படுகிறது. இவ்வாறான கொலையாளிகள் பொதுவாக கைது செய்யப்படுவதில்லை. தற்போது இந்த மாணவன் கைது செய்யப்பட்டமை இவ்வாறானவர்களின் மனநிலை பற்றி அறிந்து கொள்ள உதவும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

துப்பாக்கியை காதலிக்கும் அமெரிக்கர்கள் துப்பாக்கியை காதலிக்கும் டொனால்ட் டரம் யை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர். டொனால்ட் ட்ரம் ஜனாதிபதியாக வந்த பின் சில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற போதும் துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்தும் எவ்வித விதிமுறைகளையும் கொண்டுவருவதற்கு டொனால்ட் டரம் மறுத்து வருகின்றார். துப்பாக்கிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் துப்பாக்கிகளுக்கான அழுத்த குழுக்களும் ரிப்பிளிக்கன் – குடியரசுக் கட்சிக்கு நிதி வழங்குவதில் முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்து உயிர் கொலைகளுக்கு வழிவகுக்கும் அமெரிக்கா தன்வினை தன்னைச்சுடும் என்ற நிலையை எதிர்நோக்கி உள்ளது. அமெரிக்காவில் பயங்கரவாத நடவடிக்கைகளால் கொல்லப்படுபவர்களிலும் பார்க்க கூடுதலானவர்கள் வாகன விபத்துக்களிலும் இவ்வாறான துப்பாக்கிச் சுட்டுச் சம்பவங்களிலும் கொல்லப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான துப்பாக்கிச் சுட்டுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வெள்ளையின அமெரிக்கர்களாகவே உள்ளனர்.

உங்கள் கருத்து
  1. BC on February 16, 2018 1:04 am

    //துப்பாக்கியை காதலிக்கும் அமெரிக்கர்கள் துப்பாக்கியை காதலிக்கும் டொனால்ட் டரம் யை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர். டொனால்ட் ட்ரம் ஜனாதிபதியாக வந்த பின் சில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற போதும் துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்தும் எவ்வித விதிமுறைகளையும் கொண்டுவருவதற்கு டொனால்ட் டரம் மறுத்து வருகின்றார்.//
    அதனால் தான் துப்பாக்கியை காதலிக்கும் புலம் பெயர் புலிகளும் ட்ரம்புக்கான தமிழர்கள் என்று அவரை ஆதரிக்கும் ஒரு இயக்கமும் வைத்து இருக்கின்றனர்.

    தேசம்நெற் வாசகர்களுக்காக ஒரு இனிய இலங்கை தமிழ் பாடல்
    https://www.youtube.com/watch?v=haNp7nI22rE


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு