மத்தியில் எமக்கு கூட்டமைப்பு ஆதரவளிப்பதால் யாழ் மாநகரசபையில் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம் – விஜயகலா


vijaயாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஈபிடிபி ஆதரவளித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மத்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதால், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இதனை தெரிவித்தார். “இந்த விடயம் தொடர்பில் கட்சியின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து
 1. Vijay Rasalingam on February 15, 2018 7:20 pm

  மத்தியில ஆதரவளிக்காட்டி நீங்களும் ஆதரவை விலக்குவியளோ? ஆட்சியை கவிட்டுடுவியளோ?
  ஒரு வட்டாரத்திலதான் வெண்டனியள் (3 சீற்)!
  ஏதோ 10-15 வச்சிருக்கிறமாதிரி!
  தமிழரசுக்கட்சி/காங்கிரஸ் கட்சி கூட்டினால் 29 வருகுது.
  புருசனை சுட்டவங்கள் எண்டும் பாக்காமல் தோழரோட நிண்டாலும் உங்களுக்கு 16தான் வரும்.

  இதுக்குள்ள அங்கஜன் வேற கதை விடுறார், உயர்மட்டத்துடன் கதைச்சுத்தான் முடிவாம். 2 சீற்றை வச்சிருக்கிறவன் விடுகிறகதையைப் பாக்கேக்க தோழர் பறவய்யில்லைபோல கிடக்கு!


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு