கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் ஆட்சியமைக்க சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு பரீசீலனை – சந்திகுமார்


IMG_7462கிளிநொச்சி கரைச்சிஇ பச்சிலைப்பள்ளி  ஆகிய பிரதேச சபைகளில் ஆட்சியமைப்பதற்கு  சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள்  அமைப்பின் சுயேட்சைக்குழு பரீசீலனை செய்துகொண்டிருப்பதாக அதனுடை அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்
இன்று(15) கிளிநொச்சியிலுள்ள அமைப்பின் பணிமனையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.  அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்
கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் எம்மை ஆட்சிபொறுப்பேற்குமாறு கிளிநொச்சி மாவட்டத்தைச்  சேர்ந்த பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இந்த இரண்டு பிரதேச சபைகளிலும் ததேகூட்டமைப்பையும் விட  கூடுதலான உறுப்பினர்கள்   வெளியே இருப்பதாலும்இ கூட்டமைப்புக்கு  அளிக்கப்பட்ட வாக்குகளை விட கூடுதலான வாக்குகள் எதிர்தரப்பினர்களுகே அளிக்கப்பட்டதாலும்   கூட்டமைப்பு அல்லாதவர்களே ஆட்சியமைக்க வேண்டும்  இவர்கள் சுட்டிக்காட்டி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். அத்துடன் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் இந்த சபைகளை வினைத்திறனுடன் சிறப்பான முறையில் நிர்வகிக்க கூடிய ஆற்றல் எமக்கே உள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். எனினும் இது தொடர்பாக நாம் உடனடியாக தீர்மானிக்க முடியாது என்று கூறிய அவா்இ ஆட்சியமைப்பதாக இருந்தால் எந்தக் கட்சிகளுடனும் இரகசிய உடன்பாட்டிற்கு  வெளிப்படையாக மக்களுடைய அறிவுறுத்தல்களின் படியே இது தொடர்பில் தீர்மானிக்க முடியும் எனவும் தெரிவித்தார்
 இலங்கையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற ஒரே சுயேச்சைக் குழு நாங்களே. மொத்தமாக 19 ஆசனங்கள்.  கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ததேகூட்டமைப்பு 77 வீத வாக்குக்களை பெற்றிருந்தது. அதில் எனக்கு 13 வீத வாக்குகளே கிடைந்திருந்தன. ஆனால் இந்த உள்ளுராட்சி தேர்தலில் ததேகூட்டமைப்புக்கு 47 வீதமான வாக்குகளும்இ எங்களது சுயேட்சைக் குழுவுக்கு 30 வீதமான வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.
அரசியலில் நாங்கள் சிறப்பாக அடையாளம் காணப்பட்ட சக்தியாக இருக்கிறோம். கிளிநொச்சியில் நாம் எதையும் தீர்மானிக்கக் கூடியவர்களாக உள்ளோம்
வடக்கில் பல இடங்களிலும் பல சுயேச்சைக் குழுக்கள் வெற்றியீட்டியுள்ளன. இவை அந்தந்த இடங்களில் உள்ள பிரச்சினைகள்இ மக்களுடைய தேவைகள்இ மக்கள் நலன் சார்ந்து செயற்படும். ஆனால்இ நாங்கள் அனைவரும் ஒரு பொது நிலைப்பட்டுச் செயற்படுவதற்கான தொடர்புகளை மேற்கொண்டிருக்கிறோம்.ஏனென்றால்இ மக்கள் இந்தக் கட்சிகளில் நம்பிக்கை இழந்துஇ இந்தக் கட்சிகளுக்கு அப்பால் சுயேச்சைக் குழுக்களைத் தெரிவு செய்திருப்பதால்இ அதற்குப் பொருத்தமான ஒரு வலையமைப்பை நாங்கள் மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்த்திருக்கிறோம். இது தொடர்பாக எம்முடன் பல தரப்பினர் பேசியிருக்கிறார்கள். நாங்களும் பேசி வருகிறோம்.புதிய அரசியல் தெரிவு ஒன்றையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கூட்டமைப்போடு நாங்கள் சேர்ந்து ஆட்சியை அமைப்பதைக் குறித்துச் சிந்திக்கவில்லை. ஆனால்இ அவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் அவர்களுடைய மக்கள் நலனுக்குப் புறம்பான விடயங்களை நாம் விமர்சித்திருக்கிறோம். அதிலிருந்து அவர்கள் மாற்றங்களை உருவாக்கினால்இ அதை மக்கள் ஏற்று அங்கீகரித்தால் மட்டுமே இதைக் குறித்து நாம் பரிசீலிக்க முடியும். ஆகவே தற்போதைக்கு எந்த உடன்படிக்கையும் கிடையாது.  அதேவேளை வேறு எந்தக் கட்சிகளுடனும் எவ்வித  உடன்பாடும் இல்லையென உறுதிப்பட தெரிவித்தார்

 

உங்கள் கருத்து
  1. Vijay Rasalingam on February 15, 2018 7:41 pm

    அருமையான கல்குலேசன்! அட்டகாச பிளான்!!
    யூஎன்பி/எஸ்.எல். எப் பி/தமிழ்காங்கிரஸ்/தமிழரசுக்கட்சி/தோழர் எல்லாரையும் இணைச்சாலும் 01 தான் கூட!
    உங்களுக்கு இவ்வளவு திறமையா? இதை வச்சுக்கொண்டா பாலிமன்றில குழுக்களின் உபதலைவராயும் அப்பப்ப
    பிரதி சபாநாயகராயும் இருக்கேக்க இவங்களை ஒண்டு சேத்து கலக்கி இருக்கலாமே!


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு