கொள்கை ரீதியாக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் இணையவேண்டும் என்கிறார் சி.வி


vickneswaranதமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதியுடன் செயற்படும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் கொள்கை ரீதியாக இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கிலுள்ள பெரும்பாலான சபைகளில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து செயற்படுவது குறித்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டவர்கள் எவருடைய காலை பிடித்தென்றாலும் ஆட்சியமைப்பார்கள் என்று தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர், கட்சியைப் பற்றியோ – கொள்கை பற்றியோ சிந்திக்காத அவர்களை பொருட்படுத்தாது தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளதோடு அவ்வாறான நடவடிக்கையொன்றே தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து
  1. BC on February 17, 2018 1:42 pm

    //அவ்வாறான நடவடிக்கையொன்றே தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.//
    அவரும் தமிழர்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்று துடிக்கிறார்
    எழுக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்று இவர் தலைமையில் ஆரம்பிக்கலாம்


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு