முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின் இராணுவத்தில் இணைப்பு


ext-ltte-08புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 50 பேரை இராணுவத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புனர்வாழ்வளிப்பு ஆணையாளரின் பணிப்புரைக்கமைய, யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் மேற்பார்வையில், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றதோடு, இந்த நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த முன்னாள் போராளிகளுக்கு மாதாந்தம் 40,000 ரூபாய் சம்பளமும் மருத்துவ வசதிகளும், 55 வயதின் பின்பு ஓய்வூதியமும் வழங்கப்படவுள்ளதோடு, இவர்கள் யாழ்.பலாலியிலுள்ள இராணுவப் பண்ணைகளில் தென்னை மரங்களை பராமரிப்பதற்கான சேவையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமனம் பெற்ற இளைஞர் மற்றும் யுவதிகள் ஒரு நாளிற்கு 8 மணித்தியாலயம் சேவையில் ஈடுபட வேண்டும் எனும் நிபந்தனைகளுக்கமைய இவர்கள் இணைக்கப்பட்டுள்ளதோடு, இவர்கள் தமது சொந்த எதிர்காலத்தைக் கவனித்துக் கொள்வதன் மூலம் ஒரு குடும்பத்தாரை போலவே ஒரு நாட்டில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் இவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து
  1. BC on February 17, 2018 9:51 pm

    //புதிதாக நியமனம் பெற்ற இளைஞர் மற்றும் யுவதிகள் ஒரு நாளிற்கு 8 மணித்தியாலயம் சேவையில் ஈடுபட வேண்டும் எனும் நிபந்தனைகளுக்கமைய இவர்கள் இணைக்கப்பட்டுள்ளதோடு,//
    தமிழர்கள் என்ற ஒரு காரணத்திற்காக இப்படி துன்புறுதல்கள் செய்யபடுவதை தடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு சர்வதேச நாடுகளுக்கு உண்டு இந்த அநீதியை சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவரும் பாரிய பொறுப்பு போராளிகள் விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார், சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் இலங்கை தமிழ் உடகவியாளர்களுக்கும் இருக்கிறது.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு